அறிவாளர் பேரவை- திருச்சிராப்பள்ளி, அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். திருச்சி மாநகருக்கு அணியாய் இருந்து பெருமை சேர்த்து வரும் திருச்சி அறிவாளர் பேரவை 12.12.2001-ல்

அகில இந்திய வானொலி நிலைய இயக்குநரும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய இயக்கநருமாக இருந்து அனைவராலும் மதிக்கப் பெற்ற உயர்திரு. ப. யூ. அயூப் அவர்களைத் தலைவராகவும், திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையின் தலைமை

வழிகாட்டி ஆசிரியராக இருந்த எழுத்தாளர் வானொலி நிலைய பகுதி நேர இசைக் கலைஞர் மதிப்புமிகு கோ. அரங்கநாதன் அவர்களைப் பொதுச்செயலாளராகவும், சீதாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் மீனாட்சி அம்மாள் அவர்களையும் மாவட்டக் கல்வி அலுவலர் மங்கலம் அவர்களையும் பாதுகாவலராகக் கொண்டு இப்பேரவை உருவாக்கப்பட்டது.
சமூக நலன், மாணவர் கல்வி நலன், மருத்துவம், ஆன்மீகம், நாட்டுப்பற்று ஆகியன மேன்மையுர பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், அறிஞர் பெருமக்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்து வருகின்ற இந்தப் பேரவை மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தி வருகிறது.


நிறுவனர்களில் ஒருவராகிய கோ. அரங்கநாதன் அவர்களின் வேண்டுகோளினால் முனைவர் செ. அசோகனார் அவர்கள் மதிப்புரு ஆலோசராக இருந்து நெறிப்படுத்தி வருகிறார்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த இப்பேரவை இப்பொழுது வெள்ளி விழா காண்கிறது. இவ்வெள்ளி விழா ஆண்டில் பொறுப்பு வைக்கும் பேரு நாங்கள் பெற்றுள்ளோம்.
திருமிகு. வை. சைவராஜு அவர்கள் தலைமை தாங்கினார். திருமிகு .து. வெங்கடேசன் அவர்கள் வாழ்த்து பாடல் பாடினார். Ln. ஸ்ரீ தே. வைகைமாலா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


திருமிகு. N. பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் மொழிச் செம்மல் பேராசிரியர் முனைவர் ப. சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருது பெறுபவர் தமிழ் மொழிச் செம்மல் பெரும்புலவர் இலால்குடி, உலக புவியரசு அவர்கள் ஆவர். பேராசிரியர் முனைவர் செ. அசோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


சிறப்பு அழைப்பாளர்கள்:
திருமிகு P.K. தியாகராஜன் அவர்கள் திருமிகு R. மனோகரன் அவர்கள் முனைவர் தங்க பிச்சையப்பா அவர்கள் திருமிகு S. சிவக்குமார் அவர்கள் திருமிகு ஸ்டான்லி ராஜசேகர் அவர்கள் திருமிகு க. லட்சுமணன் அவர்கள் திருமிகு N. கஸ்தூரி ரங்கன் அவர்கள்
திருமிகு வடலூர் வாசகர் அவர்கள் திருமிகு P. சிவக்குமார் அவர்கள் திருமிகு க. மருதநாயகம் அவர்கள் சிவத்திரு கதிரேசன் அவர்கள் திருமிகு S N. மோகன்ராம் அவர்கள். திருமதி அமுதா ஸ்ரீரங்கன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பேராசிரியர்கள், திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இப்பேரவை மதிய உணவு வழங்கி மகிழ்ந்தது.















