
திருச்சிராப்பள்ளித் தமிழிசைச் சங்கத்தின் சார்பாக 220 ஆவது நிகழ்வு கிராமியக்கலை நிகழ்வுகள் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக தலைமை விருந்தினராக பங்கேற்று அவர் தலைமையிலான கலைஞர்கள் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இந்நிகழ்விற்கு தமிழிசைச் சங்கத் தலைவர் ஐயா லட்சுமணன் தலைமையேற்றார், முனைவர் மாணிக்கம் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். வரவேற்புரையை திரு சீனிவாசன் அவர்கள் வழங்கினார் நன்றியுரை ஐயா திருநாவுக்கரசர் அவர்கள் வழங்கினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் செல்வன் ஆகாஷ் ஒருங்கிணைப்பில் இயல் நாட்டார் கலை நடுவம் சந்தியா , அகிலா குழு செல்வன் ராஜா ஜெய் போஸ்கோ பரணிதரன் சதீஷ்குமார், லோகேஷ், விபீசன், குருபிரசாத், பாண்டிமீனா, பூபால கிருஷ்ணன், கங்கைஸ்ரீ, ஸ்ரீநிதி , , ஜெனிதா, துளசி, ரேணுகா, அனுஷா
சம்ரிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்கள் கலந்துக் கொண்டு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி வழங்கினர்.
கிராமிய கலையில் கரகாட்டக் கலைஞர் திரு முனியசாமி சிறப்பாக கரகாட்ட நிகழ்வை வழங்கினார்கள். தொடர்ந்து நாட்டுப்புற பாடல்கள் மக்கள் இசை பாடல்கள் நடன நிகழ்ச்சி இசை நிகழ்ச்சி தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர் கலைச்செம்மல் முனைவர் கி.சதீஷ்குமார் அவர்கள் இந்த மார்கழி மாதம் மகத்துவமான மாதம் இந்த மாதத்தில் திருப்பாவை மறுபுறம் திருவெம்பாவை இதன் நடுவே கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுகிற ஒரு சமய பொதுமையும் சமயப் பன்மையும் மிக்க தமிழிசை மரபையும் சமய மரபையும் கொண்ட நிலமாக தமிழ்நாடு திகழ்கிறது இது பெருமைக்குரியது.
இதுவே தமிழருடைய பண்பாட்டு செழுமையின் அடையாளம் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழக நாட்டுப்புற கலைகள் மக்களிடையே ஒரு மிகப்பெரிய பண்பாட்டு மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு வரக்கூடிய கலை வடிவங்களின் தாய்க் கலை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழக நாட்டுப்புறக் கலைகளுக்காக ஒரு பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும், அதற்கு வள்ளலார் பெயரை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கோரிக்கையையும் அவர் வைத்தார்.
திருச்சிராப்பள்ளி என்பது தமிழிசை பீடமாக மக்களை பண்பாட்டை சமயங்களை ஒருங்கிணைக்கிற ஒரு தனித்துவமான மாவட்டமாக திகழக்கூடிய மாவட்டம் என்று அவர் குறிப்பிட்டார்கள். அடுத்தடுத்த தலைமுறை நோக்கி தமிழிசை மரபை நாம் கொண்டு சேர்க்க வேண்டும்,
அத்தகைய அற்புதமான செயல்பாடுகளைத்தான் திருச்சி தமிழிசைச் சங்கம் 20 ஆண்டுகள் கடந்தும் இணையற்ற இந்தப் பணியை ஆற்றிவருகிறது என்றும் அதை நாங்கள் தொடர்ந்து வரவேற்கிறோம் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் கலை நிகழ்ச்சியை வழங்கிய மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.




















