இன்று 30.12.2024 காலை திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் கவிஞர் நந்தலாலா அவர்கள் உரைத்த கருத்துக்கள்,
“நல்லாரைக் காண்பதுவும் நன்று.
நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்று”.
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்று.
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.”
ஆகவே ஆகச் சிறந்த புலவன் அய்யன் வள்ளுவனைப்பற்றி கேட்கவே நான் சென்றேன்.
அப்படியே நல்லோர்களுடன் இணைந்திருக்கும் பாக்கியமும் கொண்டேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
நானும் கவிஞர்தானே!
அய்யன் வள்ளுவன் பற்றிய அழகான ஒரு கவிதை:
பஞ்சுபோல் மேகக் கூட்டம்
பகவான் சிரசில் முத்தமிட
பாற்கடலின் அலைகளெல்லாம்
பாதங்களை முத்தமிட
அரபிக் கடற்காற்று
அய்யனின்
அங்கமெல்லாம்
அரவணைக்க
அன்னை இயற்கையவள்
ஆனந்தமாய் கொஞ்சிடவே
முக்கடல் சங்கமத்தில்
முப்பாலை மொழிந்திடவே
அய்யனின் சிலையொன்று
அழகாய் நிற்கின்றதே.
அமைதியை நாடிடவே
அன்புடைமை போதும் என்றான்
கருணையை பொழிந்திடவே
கயமையை நீக்கச் சொன்னான்.
ஒழுக்கத்தை உயிரை விட மேலாக
ஓம்பச் சொன்னான்
ஒப்புரவால்; ஏழ்மையால்வரும் கேட்டை ஏற்றுமே, நேர்மையாய் வாழச் சொன்னான்.
பழிக்கஞ்சி நேர்மையாய் பொருளீட்டி
பகுத்துண்டு வாழ்ந்திடச் சொன்னான்.
அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சொல்
இவற்றை புறந்தள்ளி
இன்பமாய் வாழ்வதே அறம் என்றான்.
இரா. மும்தாஜ் பேகம்
பட்டதாரி ஆசிரியர்
பணி நிறைவு.













