• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று 30.12.2024 திங்கட்கிழமை காலை “நான் ரசித்த வள்ளுவம்” என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று 30.12.2024 திங்கட்கிழமை காலை “நான் ரசித்த வள்ளுவம்” என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

Email :157

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று 30.12.2024 திங்கட்கிழமை காலை “நான் ரசித்த வள்ளுவம்” என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் வாசகர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் சு. தனலெட்சுமி, வாசகர் வட்டத் துணைத் தலைவர் கி. நன்மாறன், வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் செ. அருணாசலம் உள்ளிட்ட வாசகர் வட்ட நிர்வாகிகள், நூலகர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். நிறைவில் வாசகர் வட்டத் தலைவர் வீ .கோவிந்தசாமி நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து நாளை 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு “தீதின்றி வந்த பொருள்” என்ற தலைப்பில் திருக்குறள் சு. முருகானந்தம் மற்றும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற தலைப்பில் முனைவர் க. பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி ஆகியோர் உரையாற்றும் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சு.தனலெட்சுமி,
முதல் நிலை நூலகர்,
மாவட்ட மைய நூலகம்,
திருச்சிராப்பள்ளி.
அலைபேசி: 93447 54036

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts