மார்கழிப் பூக்களில் முன்பனிக்கால வெயில் கோலமிடும் இனிய பொழுது
புது ஒளி
நிலமெங்கும் புதிய விளைச்சல் புதிய பாய்ச்சல்
புது வெள்ளம்
மக்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மகரந்தம் கூடும் புதிய காலையில்
துளிர்த்து எழுந்து வருக புத்தாண்டே
உலகில் பேரிடரும் பெரும் போரும் அகன்று உயிர்களிடத்தில்
பேரின்பமும் பெரு வளமும் நிறைந்திட வருக புத்தாண்டே
அறமும் அறிவும்
அருளும் வேர்விடும் திணைகளில் வேறுபாடுகள் வெறுப்புகள் பாகுபாடுகள் களைந்து வாசல் தோறும் முப்பால் பொங்கிட முத்துச்சுடராய் ஒளிவீசி
கனவு மெய்ப்பட கரங்கள் கோர்த்து
நல்வாழ்வு எய்திட
பல்லுயிர்ச் சூழல் செழித்து
வையம் உய்ய
வருக புத்தாண்டே
வருக மலர்க அருள்க.
சதீஷ் குமரன்.
கவிஞர், பேராசிரியர். கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி,
செயலர், தண்ணீர் அமைப்பு.














