“குழந்தைகளுக்கான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்சி”
03.01.2025.
ஆக்கம்:
எஸ் சிவக்குமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்.

இடம்: சண்முகா உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம்.
நடத்துபவர்: தலைமையாசிரியர் திருமதி. துரைபாக்கியம்,
உதவி
திருமதி .ஜெயந்தி, திருமதி.
ஆனந்தவள்ளி
ஆசிரியைகள்
பயிற்சி நோக்கம்:
1.தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு செல்லுதல்.
2.மாணவர்களிடம் சீரான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்குதல்.
3.பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் கொண்டு வருவது மட்டுமல்லாமல், போதிய அளவு குடிப்பதற்கும் ஊக்குவித்தல்.
நிகழ்ச்சியின் தேவை:
1.உடல் செயல்பாடுகளை பராமரிக்க தண்ணீர் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
2.தண்ணீர் குறைவாக உட்கொள்வதால் சோர்வு, தலைவலி மற்றும் கல்வித் திறன் குறைவடையும் என்பது விளக்கிக் கூறப்பட்டது.
3.சிறிய வயதிலேயே நல்ல தண்ணீர் குடிக்கும் பழக்கங்களை உருவாக்குதல்
எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் என அறிவுரை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முக்கிய செயல்பாடுகள்:
விழிப்புணர்வு அமர்வு:
தண்ணீரின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் விளக்கினர்.
தண்ணீர் உடலில் பரவலாக ஊட்டமும், தூய்மையும் வழங்குவதை விளக்கினர்.
தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினர்.
நடவடிக்கைகள் மற்றும் விளக்கப்படங்கள்:
தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை காட்டும் விளக்கப்படங்கள்.
“தண்ணீர் கண்காணிப்பு” நடவடிக்கையின்போது மாணவர்கள் தினமும் தண்ணீர் குடித்த எண்ணிக்கையை பதிவுசெய்தனர்.

நடைமுறை உதாரணங்கள்:
மாணவர்களால் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து, உடல் உணர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
கதைசொல்லல் அமர்வு:
தண்ணீர் குடிப்பதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் கதைகளை ஆசிரியர்கள் சொன்னார்கள்.
பெற்றோர் பங்களிப்பு:
பெற்றோர்களுக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வழிகாட்டல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் விளைவுகள்:
மாணவர்கள் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைப் புரிந்தனர்.
மாணவர்களின் தண்ணீர் குடிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல சீராக மாறியது.
இனிய திட்டங்கள்:
வருங்காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை விடாமல் இருக்க வலியுறுத்தப்பட்டது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மாதாந்திர மதிப்பீட்டு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
முடிவுரை:
ஸ்ரீரங்கம் ,சண்முகா உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வித் திறனையும் மேம்படுத்தும் பொறுப்பில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க சிறந்த முயற்சி எடுத்துள்ளது.
குழந்தைகளுக்கான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்சிக்கு பாராட்டுக்கள் “
03.01.2025
பாராட்டு பெறுபவர்:
ச.சந்தியாகு மேரி கலா
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நற்புதம் காளையார் கோவில் ஒன்றியம் சிவகங்கை மாவட்டம்















