• Home
  • இந்தியா
  • “சுய கற்றல்: வீரமங்கை வேலு நாச்சியார் சிறப்பு”
    03.01.2025.
இந்தியா

“சுய கற்றல்: வீரமங்கை வேலு நாச்சியார் சிறப்பு”
03.01.2025.

Email :280

சுய கற்றல்: வீரமங்கை வேலு நாச்சியார் சிறப்பு”
03.01.2025

எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்.

அறிமுகம்:
குழந்தைகளுக்கான பேசும் திறன்(Speaking Skill)  மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன்,  அறிவாற்றலை வளர்க்கவும், சமூகத்தில் தொடர்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

குழந்தைகள் தங்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பேசுதல்  முக்கியமான பங்கு வகிக்கிறது. 

  பேச்சின் மூலம் குழந்தைகள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தி, கல்வியில் நல்ல முன்னேற்றங்களை பெற்று, சமூகத்தில் தங்களை தனித்துவமாக சுய கற்றல் வாயிலாக நிலைநிறுத்தி வருகின்றனர்.

வேலு நாச்சியார் உடையில் குழந்தைக்கு பயிற்சி:

வேலுநாச்சியார், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த வீரமங்கை.

குழந்தைகள் ஒரு பாரம்பரிய மற்றும் வரலாற்று ஆதாரமாக இருக்கின்றார்கள்.

ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவி செல்வி.ஞா.லக் ஷனா, ஆறாம் வகுப்பு மாணவி , வேலுநாச்சியார்
போன்று வேடத்தில் குழந்தைகள் தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் கலாச்சாரம் மற்றும் சரித்திரத்தை உணர்ந்து, சமுதாயத்தில் நல்ல உறவுகளை ஏற்படுத்துகிறார்கள்.

வீட்டில் பெற்றோரின் பங்கு:

வீட்டில், குழந்தைகள் தங்களது கல்வி மற்றும் சமூக திறன்களை சுயமாக கற்றுக்கொள்ள மிகவும் முக்கியமான சூழல் பெற்றோர்களால் உருவாக்கப்படுகிறது. ,
  மேலும் குழந்தைகளுக்கு  அனுபவங்களை அளிக்க உதவுகின்றனர்.

பெற்றோர்கள் வீட்டு வேலைகளைச் செய்யும் போது, வீட்டு செயல்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தி, அவர்களுக்கு புதிய தகவல்களை கற்றுக் கொடுக்கின்றனர். இதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களின் திறன்களை வளர்க்கும் வழி கிடைக்கிறது.

ஆசிரியரின் வழிகாட்டுதல்:

M..தனலட்சுமி, பட்டதாரி ஆசிரியராக திருச்சி மாவட்டத்தின் தா.பாதர் பேட்டை பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றி,  குழந்தைகளுக்கு ஆழ்ந்த கல்வி பயிற்சி அளிக்கின்றார். அவரது வழிகாட்டுதலினால், குழந்தைகள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையுடன் கற்றுக்கொள்கின்றனர்.

முடிவுரை :
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள் ஆக இருக்கின்றனர்.

அவர்கள் கல்வி மற்றும் நற்பண்புகளை தங்கள் குழந்தைகளுக்கு   வழங்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர், கல்வியில் உள்ள மகத்துவத்தை உணர்ந்து, அவர்களுக்கு நேர்மையான பயிற்சியை வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், ஒரே நோக்கத்தில் இணைந்து செயல்பட்டால், குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் முன்னேற்றம் காண முடியும். இந்த ஒருங்கிணைப்பு, அவர்கள் விரும்பும் இலக்குகளை அடைய உதவும், அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்.

வீரமங்கை வேலு நாச்சியார்  விளக்கம்:

முனைவர். உஷா
விரிவுரையாளர்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காளையார் கோயில், சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts