• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி தூய வளனார் கல்லூரியின், செப்பர்டு கிராமங்களில் “தைப் பொங்கல்” கொண்டாட்டம் இன்று 10.01.2025 நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி தூய வளனார் கல்லூரியின், செப்பர்டு கிராமங்களில் “தைப் பொங்கல்” கொண்டாட்டம் இன்று 10.01.2025 நடைபெற்றது.

Email :154

தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.

பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா மத உணர்வும், இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது.

பல ஆண்டுகளாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த பொங்கல் விழாவை.
10/01/2024 இன்று சூறாவளிப்பட்டி வேலப்புடையான்பட்டி குஜிலியாம்பட்டி செங்குளம் மற்றும் மேல நாகம்மங்கலம் கிராமங்களில் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் (தன்னாட்சி) கல்லூரி மற்றும்

செப்பர்டு துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் ஆங்கிலத்துறை கணிதத்துறை விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மிகவும் சீரும் சிறப்புமாக கிராம பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts