
இன்று 10.1.2025 புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம், நடத்திய ஐம்பெரும் நிகழ்ச்சிகள்.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் நடத்திய ஐம்பெரும் நிகழ்ச்சி இன்று 10.01. 2025 அன்று மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோட்டில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நெகிழி பையை தவிர்க்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்த மஞ்சள் துணிப்பை தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு குடும்ப தலைவிகளுக்கு விளக்கப்பட்டது. மண்ணச்சநல்லூரில் உள்ள காவியா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் கலந்து உரையாடிவிட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில் கல்லூரியின் செயலர் முனைவர் அருட் சகோதரி சர்குணா மேரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிகழ்வானது நடந்தேறியது.

நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர். பி. மெர்லின் கோகிலா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இளங்கலை இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பாக பணி செய்தனர்.













