• Home
  • தமிழ்நாடு
  • “சுய கற்றல் மையம்: கல்வியில் சிறந்து விளங்கும் வெங்கடாஜலபுரம் –  முன்னோடி முயற்சி”.
தமிழ்நாடு

“சுய கற்றல் மையம்: கல்வியில் சிறந்து விளங்கும் வெங்கடாஜலபுரம் –  முன்னோடி முயற்சி”.

Email :132

“சுய கற்றல் மையம்: கல்வியில் சிறந்து விளங்கும் வெங்கடாஜலபுரம் –  முன்னோடி முயற்சி”.

ஆக்கம்:
எஸ் சிவக்குமார், முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
Mob..6383690730

அறிமுகம்:
சுய கற்றல் முறை(Self Learning) குழந்தையின் கல்வி வளர்ச்சியில் புதிய மாற்றத்தை உருவாக்கி உள்ளது.

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஒன்றியத்தின் வெங்கடாஜலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மானிய நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு. R. ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி சார்ந்த பல நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்யும் கல்வி சார்ந்த பணிகள்:

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தினசரி பாடங்களை படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி, நேரத்தைச் சரியாக ஒதுக்குகின்றனர்.

பள்ளி முடிந்த பின்பும் விடுமுறை நாட்களிலும் தொடர்ச்சியாக படிக்க வைக்கின்றனர்.

வீடுகளில் குழந்தைகளுக்கு கற்றலுக்கான அமைதியான சூழலை உருவாக்குவதோடு, தேவையான நூல்கள், சாதனங்கள் போன்றவற்றை வழங்குகின்றனர்.

கற்றல்  செயல்பாடுகளில், பெற்றோர்கள் பங்கு பெறுகின்றனர்.

ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கின்றனர்.

ஆசிரியர்கள் குழந்தைகளுக்குச் செய்யும் கல்வி சார்ந்த பணிகள்:

தொழில்நுட்ப பயிற்சி: ஆசிரியர்கள், Whatsapp போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றனர்.

சுய கற்றல் வழிகாட்டல்: குழந்தைகள் சுயமாக  கற்றல் முறைகளில் ஈடுபட வழிகாட்டுகிறார்கள். மேலும் அந்த முறைகளுக்குத் தகுந்த வழிகாட்டலையும் பரிந்துரைகளையும் செய்கின்றனர்.

குழந்தைகளின் தினசரி முன்னேற்றத்தை வாட்ஸ் அப் குழு மூலம் கண்காணிக்கின்றனர்.

சுய கற்றலின் தாக்கம்:
வெங்கடாஜலபுரத்தில் சுய கற்றல்  மூலம் குழந்தைகள் தனியே பாடங்களை படித்து புரிந்து கொள்ளும் தகுதி மேம்பட்டது.

பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும்  திறன் உயர்ந்தது.

பள்ளிக்கூட பாடங்களில் மட்டுமல்லாமல், வெளியுலக போட்டித் தேர்வுகளிலும் முன்னேற்றம் அடைந்தனர்.

முன்னோடியாக திகழும் வெங்கடாஜலபுரம்:

தலைமை ஆசிரியர் திரு. R. ரவிச்சந்திரன் அவர்களின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் கல்வி வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், வெங்கடாஜலபுரம் பள்ளி ஒரு முன்னோடியாக திகழ்கிறது.

முடிவுரை:
வெங்கடாஜலபுரம் கிராமத்தில் சுய கற்றல் முறை மூலம் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உத்வேகம் தரும் ஒன்றாக மாறியுள்ளது. இது, கல்வியில் மாற்றம் கொண்டு வர புதிய சிந்தனையை உருவாக்குகிறது.
நன்றி.
10.01.2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts