தமிழ்நாடு

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்.

Email :531

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம். 
பொன்மலையின் 40-ஆவது ஆண்டுவிழா (ரூபி ஜூப்ளி) மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை  சங்கத்தலைவர் திரு. T.S.கணேஷ்(IRSS, Retd. Dy.CMM/GOC) ஆண்டு அறிக்கை செயலாளர் ராமசாமி வாசித்தார்.

சிறப்புரை மற்றும் வாழ்த்துரை  பொன்மலை இரயில்வே பணிமனையின் முதன்மைப் பணிமனை மேலாளர் திரு.சந்தோஷ்குமார் பட்ரோ, IRSME . டாக்டர் லோகநாதன்,, திரு.S. திருமுருகன், Dy.CPO(W)/GOC,  திரு.M. நந்தகுமரன், Dy.CMM/GOC, திரு. G.R.K. ராஜு, Retd. CWM/GOC  திரு. R. நாகராஜன், Retd. Sr.DME/TPJ  மற்றும் ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர், சென்னை, விழுப்புரம், தாம்பரம், பாலக்காடு ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள  சங்கங்களின் / பெடரேஷனின் நிர்வாகிகள், வங்கி மேலாளர்கள், ஓய்வூதிய சங்க உறுப்பினர்கள் பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

தீர்மானங்கள்

24-01-2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பொன்மலை இரயில்வே காலனியில் உள்ள டாக்டர். அம்பேத்கார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்-பொன்மலையின் 40-ஆவது ஆண்டுவிழா (ரூபி ஜூப்ளி) மற்றும் பொது மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

) கொரானா வியாதி வந்தபொழுது நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கிராக்கிபபடி நிலுவைத் தொகையை உடனடியக விடுவித்து பணப்பயனை தர வேண்டுகிறோம்.

2)மருத்துவப்படியான ரூ.1000/- ஐ அனைத்து ஓய்வுபெற்ற இரயில்வே ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு பெறப்போகும் அனைத்து இரயில்வே ஊழியா;களுக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல், பாரபட்சமின்ற வழங்கவேண்டுகிறோம். மேலும், வெளிநோயாளிகள் பிரிவில் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கொடுக்கபட வேண்டும்.

3) தற்சமயம் கொடுக்கப்படும் கிராக்கிப்படி 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து அதற்குத் தகுந்தவாறு அனைத்து பதவிகளுக்கும் சரியான ஊதியத்தை நிர்ணயிக்க கணக்கீடு செய்யவேண்டும்.

4) கம்யூடேஷன் 15 வருடங்களுக்கு பிடித்தம் செய்வதை நிறுத்தி, 12 வருடங்கள் முடிவிலேயே முழு ஓய்வதியத்தை வழங்கவேண்டும்.

5)வயது முதிர்ந்தோருக்கான இரயில் கட்டணச் சலுகையை மீண்டும் அமல் படுத்தவேண்டும்.

6)குடும்ப ஓய்வூதியத்தை 30% லிருந்து 40% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

7) ஓய்வூதியர்களுக்கு 65-ஆம் வயதில் 5%, 70-ஆம் வயதில் 10%, 75-ஆம் வயதில் 15% என ஓய்வூதியத்தை அதிகப்படியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

8) 30/6 மற்றும் 31/12-ல் ஓய்வுபெற்றவர்களுக்கும், இனி ஓய்வு பெறுபவர்களுக்கும், உத்தேச வருடாந்திர சம்பள உயர்வு (Notional Increment) கொடுத்து ஓய்வதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

9) பென்ஷனர்கள் அனைவருக்கும் வருமான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

10) தமிழ்நாட்டில் இரயில்வே தொழிலாளிகளாக C & D குரூப் பிரிவில் தமிழக மக்களை வேலையில் அமர்த்த வேண்டும்.

11) சில மாநில அரசுகளால் கொடுக்கப்படுவது போன்று இரயில்வே தொழிலாளர்களின் இறப்பிற்கும் நிவாரணம் வழங்கபட வேண்டும்.

12) லைஃப் சர்ட்டிபிகேட் பெற்றதற்கு வங்கிகள் அத்தாட்சி வழங்கபடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts