
இன்று 11.02.2025 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், இருங்களூர் ஊராட்சியில் உள்ள இயற்கை விவசாய மக்களுக்கு சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக மண்புழு உரம் தயாரிக்க கூடிய இலவச மண்புழு உரம் தயாரிக்கும் பெட் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைத்தது திருச்சி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ராபின்சன் மற்றும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைவர் திரு. வின்சென்ட் அவர்கள் இருங்களூர் ஊராட்சி அவர்கள் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து எங்கள் இருங்களூர் ஊராட்சியில் உள்ள மக்களுக்கு சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சிறந்த முறையில் செய்து வருகிறது.
ஆகவே இது போன்ற இயற்கை விவசாயம் இயற்கை சார்ந்த விஷயங்களை முன்னெடுப்பதில் மிகவும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோன்ற செயலை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து நன்றி உரையாக திரு .மார்ட்டின் ஊராட்சி செயலர் அவர்கள் அவர்கள் இதுபோன்ற செயலை தொடர்ந்து எங்கள் ஊராட்சியில் செய்திட நாங்கள் எப்பொழுதும் தாயாராக இருக்கிறோம்.


எங்கள் மக்களுக்கு தேவையான நிகழ்வை தொடர்ந்து செய்து கொண்டிருக்க கூடிய சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அதனை சார்ந்த நிர்வாகிகளுக்கும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த திரு ராபின்சன் அவர்களுக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.















