• Home
  • தமிழ்நாடு
  • தி குளோரி ஆப் முத்தரையர் டைனாஸ்டி இன் இந்தியா ( ( The Glory of Mutharaiyar Dynasty in India ) எனும் முத்தரையர் வரலாற்று நூல் வெளியீட்டு விழா!
தமிழ்நாடு

தி குளோரி ஆப் முத்தரையர் டைனாஸ்டி இன் இந்தியா ( ( The Glory of Mutharaiyar Dynasty in India ) எனும் முத்தரையர் வரலாற்று நூல் வெளியீட்டு விழா!

Email :420

தி குளோரி ஆப் முத்தரையர் டைனாஸ்டி இன் இந்தியா ( ( The Glory of Mutharaiyar Dynasty in India ) எனும் முத்தரையர் வரலாற்று நூலினை பேராசிரியர் டாக்டர் கோமகன் மற்றும் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன் , இனைந்து எழுதி வெளிட்ட நூலின் பிரதியை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க  மாநில இளைஞர் அணித்தலைவர் திரு ஆர்.வி.பரதன் அவர்களிடம் வழங்கி ஆசி பெற்றனர்.

இந்நிகழ்வில் ஜெயபால் பிரஸ் உரிமையாளர் திரு சிவா மற்றும் திருச்சி சுந்தர் கலந்துகொண்டனர்.  இந்நூலில் முத்தரையர்கள் குமரி கண்ட அழிவிற்க்கு பின் கடற்கரை பகுதிகளில் மீனவனாகவும்,மாறனாகவும்,தென்னவனாகவும்,வலையர்களாகவும்,மூப்பர்களாகவும்,ஊராளி கவுண்டர்களாகவும்,மலைப்பகுதியில் வேட்டுவர்களாகவும்,புதுக்கோட்டை பகுதிகளில் அரையனாகவும் , அம்பலக்காரர்களாகவும்,காவிரி டெல்டா பகுதியில்மூப்பர்களாகவும்,முத்துராஜாக்களாகவும் ,காவல்காரர்களாகவும் பல்வேறு இனப்பெயர்களில் தமிழகத்தின் தொன்மக்குடியினராக ,மூத்த அரச குடியினராகவும் அரசாட்சி நடத்தியவர்கள். நீர் மேலாண்மை திடங்களின் முன்னோடியாக இருந்து தமிழகத்தின் வேளாண்மையை மேம்படுத்தியவர்கள். வீரத்திலும் ,தமிழ்பற்றிலும் முன்னோடி இனக்குழு முத்தரையர் மரபினரே.     முத்தரையர் மரபில் தோன்றிய சக்கரவர்த்தி கரிகாலன், பெரும்பிடு முத்தரையர் சுவரன் மாறன்,கண்ணப்பர் நாயனார்,திருமங்கையாழ்வார் முதலான அரசர்களின் வீரத்தையும் ,ஆட்சி நிர்வாக சிறப்பினையும் , தமிழுக்கு செய்த தொண்டுகளை இந்நூலில் பதிவு செய்துள்ளனர்.

கேரளா,ஆந்திரா,கர்நாடக ,குஜராத், மகாராஸ்ட்டிரா, பீகார் முதலான அனைத்து இந்திய மாநிலங்களிலும் அரையர், முத்துராஜிலு,கோலி என பல்வேறு பட்ட பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர் வரலாற்று தொன்மங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தரையர் மீனவ மரபு மற்றும் வேட்டுவ மரபில் உதித்த வேத வியாசர் ,வால்மீகி முதலானவர்களின் வரலாற்று செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முன்னால் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நூல் திருச்சி,அகஸ்தியர் நூலகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. நூல் வேண்டுவோர் 9600569891,9442146182 எனும் அலைப்பேசினை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts