• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவெறும்பூர் கிளை, திருச்சி, ஆண்டு கூட்டம் இன்று 15.02.2025 மாலை அரியமங்கலம் லட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்
    கிளைத் தலைவர் ஆசிரியர் து.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவெறும்பூர் கிளை, திருச்சி, ஆண்டு கூட்டம் இன்று 15.02.2025 மாலை அரியமங்கலம் லட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்
கிளைத் தலைவர் ஆசிரியர் து.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Email :140

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவெறும்பூர் கிளை, திருச்சி, ஆண்டு கூட்டம் 15.02.2025 மாலை 4 மணி அளவில் அரியமங்கலம் லட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கிளைத் தலைவர் ஆசிரியர் து.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அறிவியல் பாடலுடன் கிளை செயலாளர் அனைவரையும் வரவேற்றார், வரவேற்பு முடிந்து. மாவட்ட துணைத் தலைவரும், நம் கிளையின்  மாவட்ட பொறுப்பாளருமான திரு சிவ வெங்கடேசன் அவர்கள் துவக்கவுரையாற்றினார். வந்திருந்த குழந்தைகளுடன் கலந்து பேசி சிறப்பான ஒரு துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். துவக்கவுரை முடிந்து அறிவியல் பரிசோதனை, அதற்கான அறிவியல் விளக்கம்  கேள்விகளின் அடிப்படையில் கொடுத்தோம்.

அறிவியல் பரிசோதனை முடிந்து, கிளை ஆண்டு  கூட்டத்துக்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்விக்க  திரு.து. காந்தி அவர்கள் ஒரு அருமையான கருத்து பொதிந்த  விழிப்புணர்வு பாடலை பாடி கிளை ஆண்டு கூட்டத்தின்  சிந்தனையை ஒருங்கிணைத்தது  மட்டுமில்லாமல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் தேனீர் மற்றும் பிஸ்கட் வழங்கி மகிவித்தார். அதன்பின்  கிளைச் செயலாளர் கிளையின் ஓராண்டு அறிக்கையை கிளையில் வாசித்து, அனைவரின்  கரவொலியுடன் கிளையின் ஆண்டறிக்கையின் மீது  ஒப்புதல்  பெற்றார். அதன் பின் செயின்ட் ஜோசப் கல்லூரியின் பேராசிரியர் திரு லெனின் அவர்கள் கிளை ஆண்டு கூட்டத்திற்கு வாழ்த்துரை வழங்கியதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு அடுத்தடுத்து என்னென்ன நிகழ்வுகள் நடத்தலாம் எங்கெங்கு அழைத்துச் செல்லலாம் அதற்கான தன்னுடைய பங்களிப்பையும் தருவதாக உறுதிப்படுத்தியது வந்திருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

வாழ்த்துரை முடிந்து  பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இதை செல்வி மகாலட்சுமி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்.
முதலாவதாக திருச்சி மாவட்ட  குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்த  திருவெறும்பூர் அரியமங்கலம் ஆர் சி நடுநிலைப்பள்ளி  குழந்தைகளுக்கு பாராட்டும், அப்பள்ளியின் ஆய்வு அறிக்கை ஒன்று மண்டல அளவில் தேர்வு பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டும், ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்கள் மற்றும் தேசத்தலைவர்கள் முகமூடி செட் பரிசாக  கிளை சார்பில் வழங்கி மகிழ்ந்தோம்.

இக்குழந்தைகளை வழிநடத்தி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க செய்த வழிகாட்டி ஆசிரியரான திருமிகு அசிசா பிரிஸ்லின் அவர்களை பாராட்டி புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினோம். தொடர்ச்சியாக  துளிர் திறனறிதல் தேர்வு, மற்றும் கிளை சார்ந்த கூட்டங்கள் / செயல்பாடுகளில்  பங்களிப்பு செய்யும் கிளையின் மதிப்புக்குரியவர்களை கிளை ஆண்டு கூட்டத்தில் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினோம்.

இன்றைய கிளை ஆண்டு கூட்ட நிகழ்வை வழக்கறிஞர் திருமிகு விஜயலட்சுமி அவர்கள் ஒருங்கிணைத்தார். செல்வி காவியா மற்றும் திரு ராஜேஷ் கண்ணா கூட்டத்திற்கான வேலை பகிர்வை செய்தது சிறப்பு. இறுதியாக கிளையின் பொருளாளர் செல்வி ரெய்னாட் ரூபி அவர்கள்  நன்றியுரை கூறினார்.

கிளையின் ஆண்டு கூட்டத்தை நடத்த அனுமதி தந்த அரியமங்கலம் லட்சுமி மழலையர்  மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்டத்தின் சார்பிலும் கிளையின் சார்பிலும் நன்றிகளை கூறி கிளையின் ஆண்டு கூட்டத்தை இனிதே  நிறைவு செய்தோம்.
நன்றிங்க!
கிளைக்காக,
திரு.து.காந்தி,
தலைவர்.
பகுத்தறிவன்.க
செயலாளர்.
செல்வி ரெய்னாட் ரூபி
பொருளாளர்
கிளை மாவட்ட பொறுப்பாளர்
திரு சிவ வெங்கடேசன்.
திருவெறும்பூர் கிளை,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts