புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் மூன்றாவது நாளாகிய இன்று 15/02/2025 காலை 09.00 மணியளவில் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக தேசிய கைப்பந்து வீரர், பயிற்சியாளர், திரு. ஹரிஹரன் அவர்கள் கலந்து கொண்டார்.

மாணவிகளின் மனநலத்திற்கான யோகா செயல்முறைப் பயிற்சிகளாக, நினைவாற்றலை மேம்படுத்துதல், உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துதல் தொடர்பாக செயல்முறையுடன் கூடிய பல பயிற்சிகளை வழங்கினார்.

சிறந்த ஆசனங்களை செய்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள விதமாக இருந்தது. புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் பேச்சு மொழி மற்றும் செவித்திறன் ஆய்வு நிபுணவியல் துறையானது, இலவச செவி மற்றும் பேச்சுத்திறன் கண்டறிதல் மருத்துவ முகாமினை மண்ணச்சநல்லூர் கிராமத்தில் நடத்தியது. சுமார் 75 க்கும் மேற்பட்ட மக்கள் இதன் மூலமாகப் பயனடைந்தனர்.
மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் சுற்றுப்புற சூழல்களின் தூய்மை, நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் கிராம மக்களுக்கு மாணவிகள் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். பெண்கள் பாதுகாப்பும், சுய தொழில் முன்னேற்றமும் மற்றும் தூய்மை இந்தியாவின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இரண்டாவது அமர்வாகிய மதியம் “சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைக்கும்” என்னும் தலைப்பில் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் பா. பாலமுருகன் அவர்கள் பெண்களின் பயணம் குறிக்கோளை நோக்கியதாக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையோடு கூடிய வாழ்க்கை வாழ்ந்து

பெற்றோர்களை மரியாதை செய்யும் பிள்ளைகளாக, சாதனைப் பெண்களாகத் திகழ வேண்டும் என பல பயனுள்ள கருத்துக்களை வழங்கினார்.
மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள விதமாக இருந்தது.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் மெர்லின் கோகிலா வரவேற்புரை வழங்கினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மேரி ஷீலா நன்றியுரை வழங்க முகாம் இனிதே நிறைவடைந்தது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.















