• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 இன்று 15.02.2025 அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 இன்று 15.02.2025 அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

Email :184

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025.     
திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வேலு தேவர் அறக்கட்டளை இணைந்து நடத்தும்  திருச்சி மாவட்ட குழந்தை மற்றும் இளையோருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 15.02.25 சனிக்கிழமை  வயது 8, 10, 12, 14 மற்றும் 16 வயது (தனிதனியே) மாணவ, மாணவிற்கான போட்டி நடந்தது.
பரிசளிப்பு விழா மாலை 6.00 மணிக்கு திருச்சி மாவட்ட செயலாளர் டி.ராஜு தலைமையில், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், துணைச் செயலாளர் எம்.கனகராஜ், ஆகியோர் முன்னிலை நடந்தது.

போட்டியில் 1100 பேர் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
விழாவில் தெற்கு ஆசியா விளையாட்டு போட்டிகள் சென்ற மாதம் ஜனவரி 10 to12 தேதியில் நடந்த 70 வயதுக்கு மேல் உள்ள பிரிவில் எஸ்.லாசர்சூசைநாதன் 800 மீட்டர் ஒட்டத்திலும்,1500 மீட்டர் ஒட்டத்திலும் ஆகிய இரண்டிலும் வெள்ளி பதக்கங்கள் பெற்றவர், டி.ஆறுமுகம் 4 x 100 தொடர் ஒட்டத்தில் 3வதாகவும், 4 x 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் 2வதாக வெற்றி பெற்று ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்றவர்களை இருவரையும் பாராட்டு பொன்னடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார்கள்.

தடகள உதவி தலைவரும், (Commandant of policeTSP 1BN Trichy) கமாண்டர் ஆப் போலீஸ்
வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு எம்.ஆனந்தன், ஒலிம்பியன் பெ.சுப்ரமணியன், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் மாவட்ட  ஆகியோர் கலந்துக் கொண்டு   வெற்றி பெற்றவருக்கு பதக்கங்களுடன் கூடிய சான்றிதழ்களும், வெற்றி பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் சுழற்க்கோப்பைகளும் வழங்கினார்கள்.
விழாவில் திருச்சி மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளர் கே.கண்ணன்,தடகள சங்க நிர்வாகி சுரேஷ்பாபு, ரவிந்திரன், ரெங்கச்சாரி, நடராஜன், லட்சுமணன், பள்ளி உடற்பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டார்கள்.
முன்னதாக துரை வெங்கடேசன் வரவேற்றார்.

முடிவில் மாவட்ட தடகள சங்க தொகுப்பாளர் முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.
D. ராஜு,
மாவட்ட செயலாளர்,
திருச்சி மாவட்ட தடகள சங்கம்,
திருச்சி.
9965473330.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts