• Home
  • தமிழ்நாடு
  • புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நான்காம் நாளான இன்று 16/02/2025 மணச்சநல்லூர் தொகுதி, அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நான்காம் நாளான இன்று 16/02/2025 மணச்சநல்லூர் தொகுதி, அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

Email :144

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நான்காம்  நாளான இன்று 16/02/2025   மணச்சநல்லூர் தொகுதி, அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

முகாமில் சிறப்பு  விருந்தினராக முனைவர் செ.பாலசந்தர், சுய முன்னேற்றம் குறித்து மாணவிகளுக்கு உரையாற்றினார்.
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி  இசபெல்லா  ராஜகுமாரி அவர்களின் முன்னிலையிலும், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி  அவர்களின் தலைமையில் விழாவானது இனிதே நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர்  பி.மெர்லின் கோகிலா அவர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்கும் விதமாக நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார். மேலும்  சு. கீர்த்தனா இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையின் மாணவி நன்றியுரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் விநாயகர் கோவிலை தூய்மைப் படுத்தினார்கள்.  மேலும் மாணவிகள் முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

அவைகள்,
1. நெகிழி
2. இயற்கை உரம்
3. கருவேல மரம் நன்மை மற்றும் தீமைகள்
4. சமையல் தோட்டம்
5. கனிம மரம்
6. மகளிர் உடல் மற்றும் ஆலோசனை
7. நிதி மேலாண்மை காண விழிப்புணர்வு.
நாட்டு நலப்பணி திட்டம் மாணவிகள் கருவேல மரம் நன்மை மற்றும் தீமைகளை பற்றி பேரணியை மேற்கொண்டனர். இரண்டாம் ஆண்டு  நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts