• Home
  • தமிழ்நாடு
  • உலக தாய்மொழி தினம் போட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசு.
தமிழ்நாடு

உலக தாய்மொழி தினம் போட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசு.

Email :186

உலக தாய்மொழி தினம் போட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிக்கு வெள்ளி நாணயம் பரிசு. ஒவ்வொருவரும் தன்னுடைய தாய் மொழி மீது பற்றுதலோடு இருத்தல் வேண்டும். தன் தாய்மொழியின் சிறப்புகளை அறிந்து, அதனை பெருமை கொள்ளுதல் வேண்டும். அதனுடைய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ள வேண்டி 1999இல் யுனெஸ்கோ பொது மாநாட்டில் பிப்ரவரி 21-ஐ

உலகதாய்மொழி தினமாகக் கொண்டாட அறிவித்தது. 2000 ஆண்டு முதல் உலக தாய்மொழி தினத்தைக் கொண்டாடி வருகின்றோம். அத்தகைய தாய் மொழியின் சிறப்பினை மாணவர்கள் அறிவதற்காகக் கரூர் திருக்குறள் பேரவை தாய்மொழி தினப் போட்டியை அறிவித்தது. அதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மு.சு.மகிமா பங்குபெற்று 100 திருக்குறள்களையும், பாரதிதாசன் பாடலையும் ஒப்பி வித்து வெள்ளி நாணயம் பரிசு பெற்றார். சான்றிதழையும், வெள்ளி நாணயத்தையும் தமிழ்ச்செம்மல் மேலை பழனியப்பன்  வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியர் சாகுல் அமீது,வட்டாரக் கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், பாண்டித்துரை பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts