• Home
  • தமிழ்நாடு
  • “நேருஜி நினைவு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்”.
தமிழ்நாடு

“நேருஜி நினைவு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்”.

Email :1156

“நேருஜி நினைவு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்”.

திருச்சிராப்பள்ளி, 28/2/2025: நேருஜி நினைவு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மாணவர்கள் சார் ஐசக் நியூட்டன், கலிலியோ கலிலி, கொலம்பஸ், மார்கோனி, ரைட் சகோதரர்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அலெக்சாண்டர் கிரகாம் பெல் போன்ற அறிவியல் அறிஞர்கள் பற்றியும், அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றி உரையாற்றினர். மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்விகள் எழுப்பி, அதற்கான விளக்கங்களை பெற்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர், சிவகுமாரி கூறுகையில் “இந்த நிகழ்ச்சி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை வளர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த அறிவியலாளர்களாக உருவாகட்டும்”  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts