• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தேர்வு இன்று காலை திருவரங்கம் கிழக்குரெங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தேர்வு இன்று காலை திருவரங்கம் கிழக்குரெங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Email :135

திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான தேர்வு இன்று காலை திருவரங்கம் கிழக்குரெங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பேரவையின் மதிப்புறு ஆலோசகரும் தேர்தல் ஆணையருமான முனைவர் செ. அசோகன் அவர்கள் முறைப்படி தேர்தலை நடத்தி வைத்தார். தலைவர் பொதுச் செயலாளர் துணைத் தலைவர்கள் பொருளாளர் இணைச்செயலாளர் என ஒரு மனதாக போட்டியின்றி பெண்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவராக திருமதி கிரிஜா பாலசுப்பிரமணியன் அவர்களும் துணைத் தலைவர்களாக திருமதி ராஜேஸ்வரி சுப்புராமன் அவர்களும் திருமதி ஹேமலதா முரளிதரன் அவர்களும் பொதுச் செயலாளராக திருமதி அனிதா டேவிட் அவர்களும் பொருளாளராக திருமதி அமுதா அவர்களும் இணைச் செயலாளராக திருமதி சித்ரா சம்பத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலம் ஓர் ஆண்டு ஆகும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை பத்மஸ்ரீ தாமோதரன் அவர்கள் தொழிலதிபர் லட்சுமணன் உடையார் அவர்கள் பாலு தீட்சிதர் அவர்கள் புலவர் இலக்குவன் அவர்கள் பெரியவர் பரசுராமன் அவர்கள் ஜே சி ரவிச்சந்திரன் அவர்கள் நல்லாசிரியர் சைவ ராஜு அவர்கள் பொன்மலை வெங்கடேசன் அவர்கள் வழக்கறிஞர் கோமதி மங்கை அவர்கள் வைகைஸ்ரீ மாலா அவர்கள் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிறைவாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட திருமதி கிரிஜா பாலசுப்ரமணியம் அவர்கள் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள் விழா சிறப்புடன் நடைபெற்று நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts