• Home
  • தமிழ்நாடு
  • கம்பரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா!
தமிழ்நாடு

கம்பரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா!

Email :244

கம்பரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா!

அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கம்பரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியை சுப்புலட்சுமி அனைவரையும் வரவேற்று, ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

விழாவில் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், ஸ்டான்லி ராஜசேகர், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் மீனா ஆகியோர் சிறப்புரையாற்றி, பள்ளியின் கல்வி வளர்ச்சி குறித்து பேசினர்.

மேலும், தன்னார்வ அமைப்பினரைச் சேர்ந்த நாகலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியை எலிசபெத் ராணி நன்றி கூறினார். தொடர்ந்து, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts