உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு கும்பகோணம் பகுதி திருத்தளங்கள் பாதுகாக்க விழிப்புணர்வு நாள்!
கும்பகோணம் திருத்தாளங்களின் பாதுகாவலரும், அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயலாரும், வி.சத்திய நாராயணன், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், இணைந்து உலக பாரம்பரிய தினம் கொண்டாட்டம்.
இந்த உலகத்தில் வாழும் மக்களின் தோற்றம், வரலாறு, வாழ்வியல் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்த மக்கள் வாழும் இடங்களில் உள்ள பாரம்பரிய தலங்களைப் பார்த்தால் போதும், அதுவே அனைத்துக் கதைகளையும் நமக்குச் சொல்லித் தந்துவிடும்.

நவீன அற்புதங்கள் முதல் பழங்கால இடிபாடுகள் வரை, நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நமக்கு நினைவூட்டும் ஏராளமான பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பாரம்பரிய தளங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இந்த தளங்கள் மனித புத்தி கூர்மை மற்றும் படைப்பாற்றலுக்கு சான்றாக மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை பாதுகாக்கவும் நினைவூட்டுகின்றன. மற்றும், அவை எதிர்கால சந்ததியினருக்கு படைப்பாற்றல் மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் செயல்படுகின்றன.
நம் முன்னோர் விட்டுச் சென்ற பொருட்களும், இடங்களும் தான், நம் பாரம்பரியச் சொத்துக்கள். அதில், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை வருகின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பது அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்தப் பாரம்பரிய சின்னங்கள் ஓர் இனத்தையோ, காலத்தையோ, நிலப்பரப்பையோ அல்லது நாட்டின் கலாச்சாரத்தையோ பிரதிபலிக்கக் கூடியவைகளாக உள்ளன.
உலகம் முழுவதிலும் இந்த பாரம்பரியச் சின்னங்கள் பரவியிருந்தாலும், இவை மனிதகுலம் அனைத்தும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய செல்வங்களாகும். இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கவும், பராமரிப்பை ஊக்குவிக்கவும் சர்வதேச அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முக்கியப் பகுதியாகத்தான் ஏப்ரல் 18 அன்று உலக பாரம்பரிய தினம் சிறப்பிக்கப்படுகிறது.
பாரம்பரிய சின்னங்கள் அல்லது புராதன சின்னங்கள், ஓர் இடத்தின் வரலாற்றை நினைவூட்டுவதுடன், அந்த நாட்டின் வளமான பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த சின்னங்களைச் சுற்றி இருக்கும் வரலாற்று கதைகள், உல்லாசப்பயணிகளை ஈர்க்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த நினைவுச்சின்னங்கள் உள்ளன, அவை நாட்டின் வரலாற்றை உருவாக்கி, கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பங்களிக்கின்றன என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நாளின் நோக்கம்
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று சிறப்பிக்கப்படும் உலக பாரம்பரிய தினத்தின் நோக்கமே, பொதுமக்கள் தம் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்துவதாகும். கோவில்கள், மண்டபங்கள், திருக்குளங்கள், சிற்பங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், நடுகற்கள், ஈமச்சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாத்து, நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்வது ஒவ்வொரு தலைமுறையின் கடமையாகும். இது காலத்தின் கட்டாயமும்கூட. இது ஒவ்வொருவரின் பொறுப்புணர்வை வலியுறுத்தி நிற்கும் விழிப்புணர்வு நாள்.











