அரியமங்கலம் காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 17.04.2025 நிழல் இல்லா தினம் செயல்பாடுகளை பள்ளியின்
மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் திருமிகு.ஜான் சாராள் அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

அறிவியல் ஆசிரியர் திருமிகு. காந்திமதி அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவெறும்பூர் கிளையின் ITK தன்னார்வ ஆசிரியர்கள் மகாலட்சுமி அவர்களும், மெர்சி அவர்களும் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார்கள். குழந்தைகள் ஆர்வமுடன் நிழல் இல்லா தினத்தை சரியாக மதியம் 12.15 மணிக்கு செயல்பாடுகளுடன் பரிசோதனை செய்து பார்த்தார்கள். நிழல் இல்லா தினம் பற்றிய அறிவியல் விளக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளரும் திருவெறும்பூர் கிளையின் செயலாளருமான பகுத்தறிவன் குழந்தைகளிடம் ஆர்வத்துடன் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் குழந்தைகளுடன் அப்பகுதி பொதுமக்களும் நிழல் இல்லா தினத்தின் செய்தியை அறிந்து சென்றார்கள்.

12:15pm BHEL பகுதியில் நிழல் இல்லா தின பரிசோதனை செய்து பார்க்கும் மாஸ்டர் ஆதி பகவான்.V.A.












