திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் – வண்ணாடு ஊராட்சியில் 01/11/2025 சனிக்கிழமையான இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டியம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சட்ட துணை தன்னர்வலர் முனைவர் ஆ. அருண்பிரகாஷ், தேன்மொழி, கீதா மற்றும் ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தனர் மேலும் முனைவர் அருண்பிரகாஷ் அவர்கள் பேசுகையில் இலவச சட்ட ஆலோசனை மையத்தின் செயல்பாடு மற்றும் 24 மணி நேரம் சேவை பொதுமக்கள் நலன் கருதி 24X7 மணி நேரம் இலவச அழைப்பு எண் 15100 செயல்பாடு போன்ற முக்கிய அம்சங்களை மலைவாழ் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறினார் இதை தொடர்ந்து மலைவாழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளை இலவச சட்ட துணை தன்னார்வலர்கள் உதவியுடன் மனுவாக கொடுத்தனர்.














