• Home
  • தமிழ்நாடு
  • மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் 5000 பனை விதை விழா!
தமிழ்நாடு

மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் 5000 பனை விதை விழா!

Email :1134

மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் 5000 பனை விதை விழா!

மக்கள் சக்தி  இயக்கத்தின் தஞ்சை மாவட்ட சார்பாக பூதலூர் கோயில்பத்து கிராமத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் முனைவர் பாஸ்கரன் தலைமையில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகர் திரு ஜெயக்குமார் மற்றும் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் முருகானந்தம் முன்னிலையில் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. இதுவரை ஒரு லட்சத்தி பதினோராயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த ஐயப்பா குருசாமி திரு தங்கமணி மற்றும் பூதலூர் மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் திரு பாலதண்டாயுதபாணி ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக குருசாமி தங்கமணி அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் தஞ்சை மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 

மாவட்ட ஆலோசகர் ஆசிரியர் திரு சீனிவாசன், மாவட்ட பொருளாளர் திரு செந்தில்குமார், பூதலூர்  கிராமத்தை சேர்ந்த திரு ஷேக் அப்துல்லா திரு ஆதிகேசவன் திரு புண்ணியமூர்த்தி திரு சக்திவேல் திரு செல்வராஜ் திரு ரங்கநாதன் திரு சண்முகம் திரு ராமச்சந்திரன் திரு வெங்கடேஷ் திரு வெங்கடாஜலபதி

மற்றும் வினோத் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts