திருத்தவத்துறை (இலால்குடி)
அருள்மிகு பெருந்திருப்பிராட்டியார்
உடனுறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் திரு ஆதிரைப் பெருவிழாவை முன்னிட்டு
பண்ணாராய்ச்சி வித்தகர்
ப.சுந்தரேசனார் பணிமன்றம், திருத்தவத்துறைத் திருவள்ளுவர் கழகம் மற்றும் ப.சு நாடுகாண் குழு இணைந்து நடத்திய 50 தவில், நாதசுவர இசைக்கலைஞர்கள் பங்குபெறும்
மங்கல இசை விழா மற்றும்
“மங்கல இசை மன்னர்” விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இலால்குடி நகர் மன்றத் தலைவர் பி.துரைமாணிக்கம் தலைமை தாங்கினார்.திருத்தவத்துறைத் திருவள்ளுவர் கழகத்தின் தலைவர்
புலவர் உலக.புவியரசு முன்னிலையும்,அதன் பொருளாளர் ந.பாபு தம்பாச்சியா விஸ்வநாதன் வரவேற்புரையும் ஆற்றினார். திருக்கோயில் செயல் அலுவலர் மா.சுந்தரி வாழ்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு பரமாசாரிய சுவாமிகளும், திருச்சிராப்பள்ளி மௌனமடம் கட்டளை விசாரனை முனைவர் ஸ்ரீமத் மௌன திருஞானசம்பந்தத்தம்பிரான் சுவாமிகளும் எழுந்தருளி , நாதஸ்வரக் கலைஞர் அந்தநல்லூர் M.சதாசிவம், தவில் இசைக் கலைஞர் குணசீலம் K.கலியமூர்த்தி ஆகியோருக்கு ” மங்கல இசை மன்னர் ” என்னும் விருது மற்றும் பொற்கிழி வழங்கி , ஆசியுரை வழங்கினார்கள். விருதாளருக்கான அறிமுக உரையினை ப.சு.நாடுகாண் குழுவின் பொருளாளர் த.முருகானந்தம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாபெரும் மங்கல இசை நிகழ்ச்சியை திருவையாறு அரசர் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் சண்முக. செல்வகணபதி பண்ணிசை விளக்க உரையுடன் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.திருத்தவத்துறைத் திருவள்ளுவர் கழகத்தின் துணைச் செயலாளர் இலால்குடி பா.எழில்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.














