திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் நேற்று 26.12.25 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் *முனைவர்.அ.லாவண்யா* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு *வெற்றியின் மறுபெயர் முயற்சி* எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரது புதிய கருத்துக்கள் சிந்தனைகள் மாணவ மாணவிகளை வெகுவாக கவர்ந்தது. அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துரை வழங்கிய திருவரங்கம் இராசவேலர் சென்பகத் தமிழரங்கின் தலைவர் சகோதரர் *திரு.இளங்கோவன்* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைந்த நூலகத்துறை உதவி பேராசிரியர் *முனைவர்.மஞ்சுளா குமார்* அவர்களுக்கும் தலைமை வகித்த நூலகத் துறை தலைவர் கலை புல முதன்மையர் *முனைவர்.ச.லெஷ்மி* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.















