திருச்சியில் மணமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு மக்கள் சக்தி இயக்கம் மாநில செயலாளர் பேரா. எல். பாஸ்கரன் அவர்களின் மகள் தமிழ் யாழினியின் திருமணநாள் முன்னிட்டு, திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மணமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருமண விழாவில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க துணிப்பை பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினர். மணமக்கள் மற்றும் உறவினர்களுக்கு இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு திருமண விழாவை சமூகப் பொறுப்புணர்வுடன் இணைக்கும் வகையில் நடைபெற்றது. “ஒரு குடும்ப விழாவிலும் சமூக நலச் செய்தி பரவ வேண்டும்” என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த முயற்சி, பங்கேற்றவர்களின் பாராட்டைப் பெற்றது.
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் தொடர்ந்து மரம் வளர்த்தல், நீர்நிலை பாதுகாத்தல், துணிப்பை இயக்கம் போன்ற சமூகப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கே.சி.நீலமேகம்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் சக்தி இயக்கம்.














