திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் ஜீ வீ என் ரிவர்சைட்டு மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் திருச்சி ஜீயபுரம் பகுதியில் உள்ள மல்லாச்சிபுரம் கிராமத்தின் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் ஆலோசனையின்படி விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தலைமையில் ஊர் தலைவர் திரு கண்ணன் இம்முகாமிற்கு முன்னிலை வகித்தார்.

இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன் பின் பரிசோதனை இரத்த அழுத்த நோய் பரிசோதனை எலும்பு அடர்த்தி இசிஜி பெண்களுக்கான அனைத்து பரிசோதனைகள் உடல் எடை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை பல் மருத்துவ பரிசோதனை மேக்ஸ் ஐ வி~ன் மருத்துவமனை வழியாக கண் பரிசோதனை ஆகியவை இம்முகாமில் நடைபெற்றது.

மேலும் இப்பகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட மக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

அப்பகுதியின் இளைஞர்கள் மற்றும் மகளிர் குழு உதவியுடன் இம்முகாமின் ஏற்பாடுகளை ஜீ வீ என் ரிவர்சைட்டு மருத்துவமனையின் முகாம் மேலாளர் திரு சாம் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயசீலன் மற்றும் இரண்டாம் ஆண்டு முதுகலை கணினி வணிகவியல் துறை மாணாக்கர்கள் செய்திருந்தார்கள்.














