• Home
  • தமிழ்நாடு
  • இந்த மேடையிலிருந்து எழும் ஒவ்வொரு குரலும் தமிழின் பெருமையை உலகெங்கும் ஒலிக்கச் செய்யும் செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த்துறை விழாவில் மாணவர்கள் உறுதி செயின்ட் ஜோசப் கல்லூரி பணிமுறை இரண்டு தமிழ்த்துறை சார்பில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு

இந்த மேடையிலிருந்து எழும் ஒவ்வொரு குரலும் தமிழின் பெருமையை உலகெங்கும் ஒலிக்கச் செய்யும் செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த்துறை விழாவில் மாணவர்கள் உறுதி செயின்ட் ஜோசப் கல்லூரி பணிமுறை இரண்டு தமிழ்த்துறை சார்பில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது.

Email :1

இந்த மேடையிலிருந்து எழும் ஒவ்வொரு குரலும் தமிழின் பெருமையை உலகெங்கும் ஒலிக்கச் செய்யும்
செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த்துறை விழாவில் மாணவர்கள் உறுதி
செயின்ட் ஜோசப் கல்லூரி பணிமுறை இரண்டு  தமிழ்த்துறை சார்பில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரியின்  இணைமுதல்வர் முனைவர் த.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கத்தில்  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி சந்தியா மேரி வரவேற்புரை ஆற்றினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், தொடக்கவுரை ஆற்றினார். கல்லூரி துணை முதல்வர் அருள் முனைவர் சி மணி வளன், சே.ச.,  பணிமுறை இரண்டு தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி சி.பாக்கிய செல்வரதி ஆகியோர் முன்னிலை வகித்தார்.  பட்டிமன்றப் பேச்சாளர் கணேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் தொடக்கவுரையில், திருவள்ளுவர் அறத்தைக் கற்றுக் கொடுத்தார். இளங்கோவடிகள் நீதியைக் கற்றுக் கொடுத்தார். சாத்தனார் கருணையைக் கற்றுக் கொடுத்தார். கம்பர்  பக்தியைக் கற்றுக் கொடுத்தார். பாரதி வீரத்தைக் கற்றுக் கொடுத்தார். பாரதிதாசன் சமூகப் பொறுப்பைக் கற்றுக் கொடுத்தார். இந்த ஆறு பண்புகளும் மாணவர்களிடம் இருந்தால் உங்களை வெல்ல உலகத்தில் யாராலும் முடியாது. இந்த மேடையிலிருந்து எழும் ஒவ்வொரு குரலும் தமிழின் பெருமையை உலகெங்கும் ஒலிக்கச் செய்யட்டும். ஒவ்வொரு மாணவரும் ஒரு திருவள்ளுவராகவும், ஒரு பாரதியாகவும், ஒரு பாரதிதாசனாகவும், ஒரு புதிய தமிழ்ச் சிந்தனையாளராகவும் உயர இந்த நிகழ்வு துணைபுரியட்டும்  என உற்சாகப்படுத்தி  மாணவர்களை உறுதியேற்க வைத்தார். 

சிறப்பு விருந்தினர் கணேஷ் கண்ணன் அவர்தம் சிறப்புரையில்,  கற்றலின் கேட்டல் நன்று என்பதை சேக்ஸ்பியர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துக்கூறி விளக்கியவர்,
மாமனிதர்களெல்லாம் மண்ணுயிரைத் தன்னுயிர் போல் எண்ணியதாலே வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு உலக சாதனையாளர்கள் பட்டியலிட்டவர் தமிழ் இலக்கியங்கள் கூறும் அறத்தையும் மரத்தையும் விழுமியங்களாக கொண்டு மாணவர்கள் உயர வேண்டும் என அழைப்பு விடுத்தார். தமிழ் மொழியே ஒழுக்கத்தை முதன்மையாகக் கொண்டு உயிர்களிடத்தும் அன்பை பரிமாறிக் கற்றுத்தருகிறது. தமிழோடு இணைந்து சாதனையாளராகுங்கள் எனப் பதிவு செய்தார்.

நிறைவில் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி செல்வ மீனா  நன்றியுரை வழங்கினார். முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி  மீனா ஸ்வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வளனார் தமிழ்ப்பேரவைத் தலைவர் முனைவர் லோ.ரூபா துணைத்தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பேராசிரியர்கள்,  இயற்பியல் துறை, ஆங்கிலத்துறை, வணிக மேலாண்மையியல் துறை, கணிதத்துறை, கணினி அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் என  மொத்தம் 181 பேர்  வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts