• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை சார்பாக செப்பர்டு கிராமங்களில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மற்றும் கிராமசபைக்கூட்டம்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை சார்பாக செப்பர்டு கிராமங்களில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மற்றும் கிராமசபைக்கூட்டம்!

Email :15

செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை சார்பாக செப்பர்டு கிராமங்களில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மற்றும் கிராமசபைக்கூட்டம்!
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை–செப்பர்டு மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் உன்னத் பாரத இயக்கம் 2.0 வின் கீழ் தேர்தெடுக்கப்பட்ட நாகமங்கலம் சேதுராப்பட்டி அளுந்தூர் இனாம் மாத்தூர் மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினவிழா அன்று நடைபெற்ற

கிராமசபைக் கூட்டத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படியும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே ச அவர்களின் ஆலோசனைப்படியும் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச அவர்களின் தலைமையில் உன்னத பாரத இயக்கத்தி்ன் ஒருங்கிணைப்பாளர் அலெஸ்சான்டர் முன்னிலையில்
உன்னத பாரத  துணை மற்றும் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் இனாம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னாசிப்பட்டி கிராமத்தில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வேலைவாய்ப்பு

அரசுநலத்திட்டங்களை தெரியப்படுத்த கல்லூரி சார்பாக எல் இ டி தகவல் பலகை ( UBA 2.0 இயக்கம்) ஊராட்சி மன்றத்தில் அமைப்பது குறித்தும் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் அளுந்தூரில் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பாரதம் பற்றியும் ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப் கிறஸ்து ராஜா மற்றும் ரட்சனா உன்னத் பாரத இயக்கத்தின் கீழ் நிறுவப்படும் சிறியரக காற்றாலை மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் சூரியவிளக்கு அமைப்பது பற்றியும் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் மழைநீர் சேகரிப்பு மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றியும் ஒருங்கிணைப்பாளர் யசோதை எதிர்வரும் மழைகாலங்களில் முன்னேச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார மேம்பாடுபற்றியும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் கிராம பொதுமக்கள்  மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் மேலும் 20க்கும் மேற்பட்ட செப்பர்டு கிராமங்களிலும் நகர்புற குடிசைவாழ் பகுதிகளிலும் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன சிறப்பு சொற்பொழிவுகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts