இன்று திருவானைக்காவல் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் பொது அறிவினை வளர்க்கவும் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக இந்து தமிழ் திசை நாளிதழை பள்ளி சார்பில் வாங்கி படிக்க ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி அமைப்பினர் நன்கொடை வழங்கி வருகின்றார்கள். அந்த அமைப்பின் தற்போதைய தலைவர் திரு.மிதுன் செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் திரு.ஆனந்த் ஆகியோர் இன்று பள்ளிக்கு வருகை தந்து தலைமை ஆசிரியர் திரு.மருதவாணன் அவர்களிடம் ரூபாய் 5000 வழங்கி மாணவ மாணவிகளுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசி வாழ்த்துரை வழங்கினர். அவர்களுக்கு பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

அதே போல தொடர்ந்து 3 வது ஆண்டாக இந்து தமிழ் திசை நாளிதழ் அரசு பள்ளி மாணவ மாணவியர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு நமது திருவானைக்காவல் பகுதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு மிகவும் குறைந்த விலையில் இந்து தமிழ் திசை நாளிதழை வழங்கி வருவது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் தெரிவித்துகொள்கிறேன்.














