• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வேலைவாய்ப்புக் கருத்தரங்கம்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வேலைவாய்ப்புக் கருத்தரங்கம்!

Email :35

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வேலைவாய்ப்புக் கருத்தரங்கம்!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையில் இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்வு இயக்குனர் முனைவர் எம்.மகேந்திரன் தொடக்க உரையாற்றினார். வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பிரிட்டோ ஸ்டாலின் உலகளாவிய சூழலில் தமிழ் கற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்துச் சிறப்புரையாற்றினார்.  முன்னதாக வரவேற்புரையாற்றினார். பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை முனைவர் ரெ.நல்லமுத்து உள்ளிட்ட பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts