• Home
  • தமிழ்நாடு
  • கல்லூரி கலாட்டா,
    28.10.2026 திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் இயற்பியல் துறை, செப்பர்டு – சமூக கலை அறிவியல் மேம்பாட்டுத்துறை மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் இயக்கம் சார்பாக “கல்லூரி கலாட்டா” நிகழ்ச்சி அகில இந்திய வானொலி; எஃப் எம்  ரெயின்போ பண்பலை 102.1 ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழ்நாடு

கல்லூரி கலாட்டா,

Email :26

ரெயின்போ  எஃப் எம் பண்பலை 102.1 மற்றும் செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி, இணைந்து நடத்திய இச்சிறப்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே ச அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…” என்ற ஊக்கமளிக்கும் பாடலுடன் துவக்கி வைத்தார்.
இந்நேரலை ஒளிப்பரப்பில் கல்லூரி மாணாக்கர்கள் திரளாக கலந்து கொண்டு பாடல், நாடகம், பேச்சு, நகைச்சுவை உரையாடல், கவிதை மற்றும்  வயலின் வாசித்தல் என தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 

இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜான்சன் அவர்கள்  கல்லூரியின் மேனாள் மாணாவர்களான புகழ்பெற்ற மேதகு குடியரசுத் தலைவர் முனைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர் ஜீ என் ராமச்சந்திரன் ஆகியோரின் சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
செப்பர்டு துறை இயக்குனர்  அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களின் பாடலுடன் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும்   உன்னத் பாரத் அபியான் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அலெக்சாண்டர் அவர்கள் “முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறக்கூடாது!” என்று கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தினார் . நிகழ்ச்சியை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பிரிஸில்லா மற்றும் லாவண்யா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை  செப்பர்டு ஒருங்கிணைப்பாளர்கள் லெனின் ஜெயசீலன்  யசோதை சுதாகர் ராட்சனா இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts