• Home
  • தமிழ்நாடு
  • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஐந்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று கிராம வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்த செயின்ட் ஜோசப் கல்லூரி – உன்னத் பாரத் இயக்கம்!
தமிழ்நாடு

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஐந்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று கிராம வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்த செயின்ட் ஜோசப் கல்லூரி – உன்னத் பாரத் இயக்கம்!

Email :12

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஐந்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று கிராம வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்த செயின்ட் ஜோசப் கல்லூரி – உன்னத் பாரத் இயக்கம்
திருச்சிராப்பள்ளி, நவம்பர் 2026.
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் செப்பர்டு – சமூகக் கலை அறிவியல் மேம்பாட்டுத் துறை மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் உன்னத் பாரத் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூரியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகமங்கலம், சேதுராப்பட்டி, அளுந்தூர், இனாம் மாத்தூர் மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய ஐந்து கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் கல்லூரியின் சார்பில் பங்கேற்று, கிராமங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியும், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே.ச. மற்றும் செப்பர்டு – சமூகக் கலை அறிவியல் மேம்பாட்டுத்   துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச. ஆகியோரின் ஆலோசனையின்படியும் இக்கூட்டங்களில் கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன.
உன்னத் பாரத் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் அலெக்சாண்டர், சேதுராப்பட்டி ஊராட்சியில் சிறிய அளவிலான காற்றாலை அமைத்தல், மழைநீர் சேகரிப்புத் தொட்டி நிறுவுதல் மற்றும் சூரிய சக்தி விளக்குகள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் குறித்தும் எல் நினோ பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். 

திட்டஅனுமதி கடித நகலையும்  வழங்கினார் மேலும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்தியுடன் இணைந்து குஜிலியான் குளத்தைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வது குறித்துத் தெரிவித்தார்.
உன்னத் பாரத் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும் செப்பர்டு முதுநிலை ஒருங்கிணைப்பாளருமான லெனின், இனாம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னாசிப்பட்டி கிராமத்தில் பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சிகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றியும், பொதுமக்கள் அரசின் திட்டங்களை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இனாம் மாத்தூர் ஊராட்சி மன்றத்தில் உன்னத் பாரத் இயக்கத்தின் சார்பில் எல்.இ.டி. தகவல் பலகை நிறுவுவது குறித்தும் மேலும் எல் நினோ விளைவு மற்றும் 4எஃப்  நெருக்கடியான உணவு எரிபபொருள்  உரம் நிதி இதனை உணர்ந்து நீர் சேமிப்பு இயற்கை விவசாயம் சுய உதவி சேமிப்பின் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், அளுந்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதன் அவசியம் தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஒருங்கிணைப்பாளர் யசோதை, நாகமங்கலம் ஊராட்சியில் எதிர்வரும் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைக்கால நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ரட்சனா, இனாம்குளத்தூர் ஊராட்சியில் மகளிரின் சுயதொழில் மற்றும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்தும், கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இக்கிராம சபைக் கூட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்றச் செயலாளர்கள், கிராமப் பொதுமக்கள் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இக்கூட்டங்களின் ஒரு பகுதியாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மழைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வுகளின் மூலம் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கல்லூரியின் சமூகப் பங்களிப்பின் வாயிலாக கிராமங்களின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள்

முன்னெடுக்கப்பட்டன.மேலும் வருகின்ற தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கும் போது அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று கூறப்பட்டது
இக்கிராம வளர்ச்சிப் பணிகள்; நிலையான வளர்ச்சி இலக்குகளான நல்ல உடல்நலம் மற்றும் நல்வாழ்வு  தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம் மலிவான 

மாற்று எரிசக்தி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி காலநிலை மாற்றம் அதற்கான நடவடிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்து உலகளாவிய இலக்குகளை அடைவதற்கும் கல்லூரி தனது சமூகப் பங்களிப்பின் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts