இன்று 29.10.2026 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை சார்பில், “மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உத்திகள்” (Strategies for Shaping the Future of the Students) என்ற தலைப்பில் குழுத் திட்ட நிகழ்வு இன்று திருச்சி மேலப் புதூரில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை முதலாமாண்டு முதுகலை சமூகப்பணி மாணவி தி. சரண்யா வரவேற்புரை வழங்கினார். செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி . கார்மெல்டா தலைமை உரையாற்றினார்.

திருச்சி மத்திய சிறைச்சாலையின் ஆலோசகர் திரு. மோசஸ் கே. பீட்டர் சிறப்புரையாற்றினார்.
டாக்டர் க. மகேஸ்வரி உதவிப் பேராசிரியர் சமூகப்பணித்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, இலக்குகளை நிர்ணயித்தல், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்நிகழ்வு அமைந்தது. இதில் 57 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
சமூகப் பணித்துறை முதலாமாண்டு மாணவர் திரு .ரா. சௌந்தர் நன்றியுரை வழங்கினார். முதுகலை முதலாமாண்டு சமூகப்பணி மாணவி நா. மதுசூர்த்திகா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் எதிர்காலத் திட்டமிடலுக்கும் வழிகாட்டும் நோக்கில் இக்குழுத் திட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.















