திருவெறும்பூரில் ‘லிட்டில் பிரஷ்’ ஓவியக் கண்காட்சி – சீசன் 2! அக்டோபர் 28 முதல் நவம்பர் 1 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
திருவெறும்பூர் அருகே கைலாசபுரம், பிஹெச்இஎல் கிளப் வளாகத்தில் சோழன் கலை ஓற்று கலைக் கழகம் சார்பில் ‘லிட்டில் பிரஷ்’ (Little Brush) சிறுவர் ஓவியக் கண்காட்சி சீசன் 2, அக்டோபர் 28 முதல் நவம்பர் 1-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா அக்டோபர் 28-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இளம் கலைஞர்களின் படைப்பாற்றலையும் ஓவியத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோழன் கலை ஓற்று கலைக் கழகத்தின் நிறுவனர் மற்றும் கலை ஆசிரியர் சித்தன் சிவா வழிகாட்டுதலில் நடைபெறும் இக்கண்காட்சியில், சிறுவர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் ஓவியப் படைப்புகள் இடம்பெறுகின்றன.
தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.வி. கிருஷ்ணசாமி பங்கேற்றார்.


சிறப்பு விருந்தினர்களாக ஒப்பந்ததாரர் ஆர்.டி.எம். கோபாலகிருஷ்ணன், தென்னிந்திய வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் மேலாளர் ஆர். தர்ஷன், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம், அமெரிக்காவில் பணியாற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சி திறந்திருக்கும்.


அனுமதி இலவசம்; ஐந்து நாட்களும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
குழந்தைகளின் கற்பனைத் திறன், கலை ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் இக்கண்காட்சியைக் கண்டு ரசிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சித்தன் சிவா,
99943 26879.














