• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிக்கு வந்தடைந்த “தாய் மண்ணே வணக்கம்” யாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு!
தமிழ்நாடு

திருச்சிக்கு வந்தடைந்த “தாய் மண்ணே வணக்கம்” யாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

Email :20

திருச்சிக்கு வந்தடைந்த “தாய் மண்ணே வணக்கம்” யாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு!
இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண்ணின் வளத்தையும் மரங்களின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் நடைபெற்று வரும் “தாய் மண்ணே வணக்கம்” யாத்திரைக் குழுவினர் இன்று திருச்சிக்கு வருகை தந்தனர்.

அவர்களை KRG Foundation சார்பில் ராஜகோபால், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், முசிறி பசுமை சிகரம் விதைகள் அமைப்பின் யோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இயற்கை வேளாண்மை, மரம் வளர்ப்பு, மண் வளப் பாதுகாப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் கிராமங்களின் தன்னிறைவு ஆகியவற்றின்

அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் இந்த யாத்திரை, இயற்கையோடு இணைந்த வாழ்வியலை வலியுறுத்துகிறது.
மண்ணையும் இயற்கையையும் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமை என்பதை வலியுறுத்தும் இந்தப் பயணம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts