• Home
  • தமிழ்நாடு
  • பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின், சுய உதவிக்குழு தலைவிகளுக்கான  நலத்திட்டங்கள் குறித்த பயிற்சிப் பட்டறை, நேற்று 31.10.2026 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை மற்றும் தொன் போஸ்கோ இளையோர் கிராமம் இணைந்து, “சுய உதவிக்குழு தலைவிகளுக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள்” என்ற தலைப்பில் குழுப் பணி நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகிலுள்ள சூசைப்புடையான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின், சுய உதவிக்குழு தலைவிகளுக்கான  நலத்திட்டங்கள் குறித்த பயிற்சிப் பட்டறை, நேற்று 31.10.2026 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை மற்றும் தொன் போஸ்கோ இளையோர் கிராமம் இணைந்து, “சுய உதவிக்குழு தலைவிகளுக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள்” என்ற தலைப்பில் குழுப் பணி நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகிலுள்ள சூசைப்புடையான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது.

Email :122

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின், சுய உதவிக்குழு தலைவிகளுக்கான  நலத்திட்டங்கள் குறித்த பயிற்சிப் பட்டறை!
நேற்று 31.10.2026 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை மற்றும் தொன் போஸ்கோ இளையோர் கிராமம் இணைந்து, “சுய உதவிக்குழு தலைவிகளுக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள்” என்ற தலைப்பில் குழுப் பணி நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகிலுள்ள சூசைப்புடையான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 92  பேர் பங்கேற்றனர்.

நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. அடுத்ததாக பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவர் செல்வன் ச. கிஷோர் வரவேற்புரை வழங்கினார். 

இந்த பயிற்சி பட்டறையில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் குழுப்பணி மாணவர்களால் உருவாக்கப்பட்ட கையேடு பத்மஶ்ரீ  விருது பெற்ற திரு.ம. சுப்புராமன் அவர்களால் வெளியிடப்பட்டது. தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தின் இயக்குநர் அருட்தந்தை அருள் ஆண்டனி தலைமையுரை வழங்கினார்.

அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி அ. ஆரோக்கிய மேரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறையின் இணைப் பேராசிரியரும் ஆசிரிய மேற்பார்வையாளருமான முனைவர் த. நிர்மலா அவர்கள்  வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பத்மஸ்ரீ திரு. ம. சுப்புராமன், சமூகப் பணியாளர் மற்றும் SCOPE அமைப்பின் நிர்வாக அறங்காவலர், “திறன்களை மேம்படுத்துவோம்!

பொருளாதாரத்தை உயர்த்துவோம்!” என்ற தலைப்பில் சுய உதவிக்குழு பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட பெண்கள் மேம்பாட்டிற்கான மாவட்ட மையத்தின் பாலின சமத்துவ நிபுணர் திருமதி ஷே. மெஹருன்னிஷா, “அரசு நலத்திட்டங்களை அறிவோம்! வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம்!” என்ற தலைப்பில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து,

அவர் பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தும் வகையில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் மற்றும் குழு‌ செயல்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.‌ இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த குழு பணி மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  மேலும்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடம் முன் சோதனை மற்றும் பின் சோதனை  குழுப்பணி மாணவர்களால் நடத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பகிர்வு நிகழ்வில் பங்கேற்பாளர்கள் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இறுதியாக, பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மாணவி செல்வி சே. யாழினி நன்றியுரை வழங்க, நாட்டுப்பண்ணுடன் இனிதே  நிகழ்வு நிறைவுற்றது.
சுய உதவிக்குழு பெண்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் வாழ்வாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இக்குழுப்‌பணி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts