• Home
  • தமிழ்நாடு
  • தேசிய குழந்தைகள் அறிவியல் திருச்சி மாவட்ட மாநாடு!
    தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் கல்வித் தொழில்நுட்பம் மற்றும் மகளிரியல் துறை இணைந்து காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகம் யுஜிசி எம்.எம்.டி.டி.சி பாவேந்தர் அரங்கத்தில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 31.10.2026 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் திருச்சி மாவட்ட மாநாடு!

Email :3

மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது.

நிகழ்வை கல்வித் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், யுஜிசி எம்.எம்.டி.டி.சி பொறுப்பு இயக்குனருமான பேரா.எஸ்.செந்தில்நாதன், மகளிரியல் துறைத் தலைவர் பேரா.எஸ்.சுபா ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். முதலில் மாவட்ட இணைச் செயலாளர் பேரா.ஜானி குமார் தாகூர் அனைவரையும் வரவேற்று தொடக்க நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
ஆசிரியர்களுக்கான இணை அமர்வில் அறிவியல் மனப்பான்மை குறித்து திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மருந்தாக்கவியல் துறை பேரா.ஆ.புரட்சிக்கொடி, கல்வி குறித்து எழுத்தாளர் இரா.எட்வின் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வை மாவட்ட துணைத் தலைவர் திரு.க.திருமாவளவன் ஒருங்கிணைத்தார். மாவட்ட துணைத் தலைவர் திரு.து.காந்தி இடையிடையே அறிவியல் பாடலை பாடி அனைவரையும் உற்சாக மூட்டினார்.
இதில் 35க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 140-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 66 ஆய்வு அறிக்கை படைப்புகளை சமர்ப்பித்தனர். நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற கருப்பொருளின் கீழ் ஐந்து தலைப்புகளில் ஆய்வு அறிக்கை தயாரிக்க ஆசிரியர், மாணவர்களுக்கு ஏற்கனவே ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டது. 50 ஆசிரியர்கள், 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மாணவர்களின் படைப்புகள், ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்தனர். இதில் 7 படைப்புகள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து நவம்பர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் திருப்பூரில் மாநில மாநாடு நடைபெறுகிறது.

இதன் நிறைவு நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு.ஜான்சன் பிரான்சிஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.சிவ.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டு அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் பேரா.எம்.லெட்டீசியா சமர்பித்தார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மேனாள் துணை வேந்தர் பேரா.எம்.கிருஷ்ணன் அவர்கள் குழந்தை விஞ்ஞானிகளுக்கு பரிசு புத்தகங்களை வழங்கி சிறப்புரை வழங்கினார். கல்வியாளர் திரு.ஆர்.மனோகரன், எம்.எம்.கே பசீர் அகமது, மாநிலச் செயலாளர் திரு.மு.மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.மு.மாணிக்கத்தாய், மாவட்டச் செயலாளர் பேரா.அருண்விவேக், மேனாள் மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் ஆர்.சித்தா, இணைச் செயலாளர் பேரா.மு.அ.ரிபாயத் அலி, நிர்வாகக்குழு உறுப்பினர் திருமிகு.ஆர்.பிரபா, கல்வி ஒருங்கிணைப்பாளர் பேரா.கி.கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் திரு.ச.மாரிமுத்து நன்றி கூறினார். துளிர் திறனறிதல் தேர்வு போஸ்டர் வெளியிடப்பட்டு பங்கேற்ற அனைத்து குழந்தை விஞ்ஞானிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts