• Home
  • தமிழ்நாடு
  • பிளாஸ்டிக் கலன்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மற்றும் பானங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
தமிழ்நாடு

பிளாஸ்டிக் கலன்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மற்றும் பானங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

Email :243

மைக்ரோபிளாஸ்டிக்ஸை முழுவதுமாகத் தவிர்த்துவிட முடியாது. லண்டனில் உள்ள கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சி, ‘நாம் சுவாசிக்கும் காற்றிலேயே இவை கலந்திருக்கின்றன’ என்று பகீர் கிளப்புகிறது. என்றாலும் பொதுவான அறிவுரைகள் சிலவற்றைச் சொல்கிறார்கள். பிளாஸ்டிக் கலன்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மற்றும் பானங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
பிளாஸ்டிக் பாத்திரங்களில் சுடவைக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்த்துவிட வேண்டும். மைக்ரோவேவ் அவன்களைத் தவிர்ப்பது நல்லது.
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் mollusks எனப்படும் முதுகெலும்பில்லாத உயிரிகளுக்கு (நத்தை, சிப்பி போன்றவை) ‘நோ’ சொல்லுங்கள். இவற்றில் மிக அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்படுகின்றன.

பிளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிடுவதையும் தவிர்த்துவிடலாம்.
சமையலறையில் பாத்திரங்கள் கழுவ பிளாஸ்டிக் பிரஷ் மற்றும் ஸ்பாஞ்சுகளைத் தவிர்த்துவிடவும். பிளாஸ்டிக் டிட்டர்ஜென்ட் பாட்டில்களும் வேண்டாம்.
பிளாஸ்டிக் போர்டில் வைத்துக் காய்கறி நறுக்கும்போது அந்த போர்டிலிருந்து 300 மைக்ரோபிளாஸ்டிக் துகள் வரை வெளியேறுவதாக ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. இந்தப் பழக்கத்தையும் தவிர்க்கவும்.
தண்ணீர் அமைப்பு,
நன்றி ஆனந்தவிகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts