பிப்ரவரி 09 கொத்தடிமைத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னக இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 06.02.25 நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பேசுகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 09 ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள்
என்போர் யார் அவர்களின் நான்கு வகையான உரிமைகள் குழந்தைகள் மீதான வன்முறைகளான பெண் சிசுக்கொலை கருக்கலைப்பு குழந்தைத் திருமணம் குழந்தை கடத்தல் பாலியல் வன்முறை சட்ட விரோதமாக குழந்தை விற்றல் குழந்தை சித்திரவதை செய்தல் குழந்தைத் தொழிலாளர், குழந்தையை வைத்து யாசகம் எடுத்தல் குறித்தும் குழந்தைகள் நலம் சார்ந்த சட்டங்களான இளஞ்சிறார் நீதி சட்டம் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், குறித்தும் கிராம வட்டார மாவட்ட நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி மண்டல அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் பணிகள்

குறித்தும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும் வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும் கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும் எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன் பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தரிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமைத்

தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் நான் உளமாற உறுதி கூறுகிறேன். என அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் இரயில்வே பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.













