அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். மகிழ்முற்றம் செயலாளர் சகாயவில்சன் மஞ்சள் பை பயன்படுத்துவதால் இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சுகாதாரக் கேடுகள் மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவதைப் பற்றியும் எடுத்துக் கூறினார். பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபானு நெகிழிப்பைகள் கால்நடைகளையும், குடிநீர் ஆதாரங்களையும் பாதிப்பதை எடுத்துக் கூறினார்.

எனவே நெகிழிப்பைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவரிடம் எடுத்துரைத்தனர். பேரூராட்சித் தலைவர் ஜெயந்தி மணிகண்டன் செயல் அலுவலர் செல்வராஜ் அவர்களின் உத்தரவின் படி பேரூராட்சி மேற்பார்வையாளர் அருள் மற்றும் ஷேக் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கதிரேசன் நன்றி கூறினார்.














