• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாட்டு ஆசிரியர் மற்றும் மாணவியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் சாதனை!
தமிழ்நாடு

தமிழ்நாட்டு ஆசிரியர் மற்றும் மாணவியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் சாதனை!

Email :171

அரசுப் பள்ளியில் படிக்கும் 20 மாணவ மாணவிகளை சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆல் இந்திய புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் சாதனை படைக்க வைத்தது மட்டுமின்றி எம் பள்ளி மாணவர்களின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இணையதளத்தில் ஆர்வத்தோடு தேடும் போது தொடர்ந்து 55:26 மணி நேரம் ஆடியோ கொடுத்து சாதனை என்ற ஆஸ்திரேலியாவின் மரியோ பிக்ஸ் கின்னஸ் சாதனை நிகழ்வு கண்ணில் பட்டது.

மாணவர்களை சாதிக்க தூண்டும்போது நாம் சாதித்தால் தான் அவர்களை சாதிக்க  தூண்டுவதற்கு முன்மாதிரியாக இருக்கும் என்ற நோக்கத்தோடு இந்த ஆடியோ நிகழ்வில் நாம் ஏன் பங்கேற்க கூடாது என்று நினைத்து அதற்காக விண்ணப்பித்து, விண்ணப்பம் அனுமதிக்கு காத்திருந்து, பின்னர் அனுமதி பெற்று அந்த நிகழ்வை 31 ஜனவரி மதியம் 2:45மணிக்கு ஆரம்பித்து  மூன்றாம் தேதி பிப்ரவரி காலை 3:00 மணிக்கு முடித்து தொடர்ந்து 60:15  மணி நேரம் மாணவர்களுக்காக தமிழின் அதிசயம் கற்றல் கற்பித்தலின் புதுமைகள் மேற்படிப்புக்கான வழிகாட்டி

மாணவர்களின் தூண்டுதலுக்காக தமிழகத்தில் உள்ள அந்தந்த பாடப்பகுதியில் தேர்ந்த அறுபது ஆளுமைகளுடன் உரையாற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஆற்றியிருக்கிறார். தென்காசி மாவட்டம் கேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியராகப் பணி புரியும் தேசிய நல்லாசிரியர் திருமதி மாலதி. இந்த நிகழ்வுகளை கண்காணிப்பதற்கு அவருடன் 30 சாட்சிகளும் நேரத்தை கண்காணிப்பதற்கு நான்கு நேர கண்காணிப்பாளர்களும் நிகழ்வு சரியாக நிகழ்கிறதா என்று இணையத்தில் கண்காணிப்பு கண்காணிப்பதற்கு இரண்டு இணைய சாட்சிகளும் ஆல் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் இருந்து அதன் நிறுவனர் மற்றும் பொறுப்பாளர்களும் கண்காணித்தார்கள்.

தான் உலக சாதனை படைக்கும் முன்னர் தன் மாணவியையும் உலக சாதனை படைக்க வைத்திருக்கிறார்.  அறிவியல் பாடத்தில் உள்ள தனிம வரிசை அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களை ஒரு நிமிடத்தில் அடக்கி கின்னஸ் உலக சாதனை நிகழ்வுக்காக ஜனவரி 26 அன்று எட்டாம் வகுப்பு மாணவி ஹர்ணிகா அடுக்கி உலக சாதனை படைத்திருக்கிறார். இரண்டு நிகழ்வுகளையும் பார்த்து பூரித்துப்போன ஊர் பொதுமக்கள் மற்ற மாணவ மாணவிகள் ஆசிரியரையும் மாணவியையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டு ஆசிரியர் மற்றும் மாணவியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணி புரியும் தேசிய நல்லாசிரியர் திருமதி மாலதியும் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஹர்னிகா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts