தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கு பரிசு வழங்கும் விழா, 07.02.2025 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது.
இத்திட்டம் மூலமாக மரபுக் கவிதை, புதினம், சிறுகதை, நுண் கலை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம் என 33 வகைப்பாடுகளில் நூல்கள் பெறப்பட்டு ஒவ்வொரு நூலையும் மூன்று அறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றடன.

இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு 33
நூலாசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், அவற்றைப் பதிப்பித்த 33பதிப்பகங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
இவ்விழாவில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில், ‘சிவாலயம்’ வெளியீடான ‘தமிழ்ச் சமயச்சான்றோர் தணிகை மணி வ.சு.செங்கல்வராய பிள்ளை’ எனும் நூல் தேர்வானது. இந்நூலுக்கான பரிசினை நூலாசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை ஆய்வு மாணவர், பா. எழில் செல்வன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர்
வே. ராஜாராமன், இயக்குநர் ஔவை ந.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













