

11.12.24 பாரதியார் பிறந்தநாள் விழா! திருச்சி மன்னார்புரம் விழி இழந்தோர் மகளிர் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேச்சுப் போட்டி தலைப்பு, தன்னம்பிக்கை பாட்டுப் போட்டி தலைப்பு திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியார் பாடல்கள், பத்து நாட்களுக்கு முன்பே போட்டியை அறிவித்தேன்.
நேற்று அற்புதமாகப் பாடினர், பேசினர்.

பிறவியிலேயே பார்வை இழந்த அந்தப் பிள்ளைகள் பேச்சால் நான் புதிய எழுச்சியைப் பெற்றேன் என்பது தான் உண்மை . அவர்கள் அரசு தேர்வு வங்கித் தேர்வு எழுத அத்தனைப் புத்தகங் களையும் வாங்கித் தருவதாக வாக்களித்தேன் ஏற்கனவே Group 4 எழுத புத்தகங்கள் வாங்கித் தந்தேன் . Tiffin plates towels பரிசுகளாக அளித்தேன் அவர்கள் என்னை ஒரு சேர வாழ்த்திய போது அது இறைவனின் ஆசிர்வாதமாகத் தொனித்தது மகிழ்ச்சி.

நிறைவு கடந்து கண்கள் கசிந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள் இல்லலயா ! அப்பிள்ளைகளின் மனவலிமை நமக்குப் பாடமாகட்டும் வாழ்த்துங்கள் அவர்களுக்காகப் பிராத்தியுங்கள். வாழ்க நலமுடன் அனுதினம் டிரஸ்ட் S. அருணா.











