கிரீன் பார்க் லிட்டில் கிங்டம் மாண்டிசரி மழலையர் பள்ளியில் மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித்தாளாளர் ஹேமலதா சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் முகமது ஷபி, தலைவர் பிரசன்ன வெங்கடேசன், செயலர் ரங்கராஜன், துணைத் தலைவர் கார்த்தி, சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இயக்குனர் சோனா

பிரசன்னா, மக்கள் தொடர்பாளர் ராஜி ஜோசப், பால் ஞானசேகர், உறுப்பினர் வளர்ச்சி குழு மகேஸ்வரி, தேவிகா உட்பட மழலையர் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமிட்டு பாரதியார் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பள்ளி ஆசிரியர்கள் ரேவதி ராஜி நித்யா பிரியங்கா செல்லா ராணி மற்றும் உதவியாளர் அமுதா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












