என் வாணாளில் நான் செய்து முடிக்க வேண்டிய வேட்கையாகக் கொண்ட பணிகளுள் ஒன்றே இக்கலைச்சொல் அகரமுதலி தொகுப்புப் பணியாகும்.
தமிழ்கூறு நல்லுலகில் மட்டுமல்லாமல் ஏனைய மொழியினருக்கும் கலைச்சொல்லாக்கப் பணி ஒரு தொடர் பணியாகும்.
பல்லாண்டு காலமாக நான் ஆக்கிய சீராக்கம் செய்த இணைத்த பத்தாயிரம் சொற்களைத் தொகுத்து இக்கால் அகரமுதலியாக்கியுள்ளேன்.
இவ்வகரமுதலியை நான் தொகுத்து விரைந்து வெளியிட பலரும் ஊக்கப்படுத்தினர்.

இக்கலைச்சொல் தொகுப்பு தமிழ்நாட்டில் தமிழ்மண் பதிப்பகத்தால் பதிப்பு செய்யப்பெற்று அச்சேற்றப்பட்டு, வரும் ஆண்டு மலேசியாவில் வெளியீடு காணவுள்ளது.
இஃது என் உழைப்பின் மற்றொரு விளைச்சல், இதன் தொடர்பதிப்புகளில் மேலும் மேலும் புதிய சொற்கள் சேர்க்கப்படும். காலத்தால் இக்கலைச்சொல் அகரமுதலி பலராலும் பெரிதும் பயன்படுத்தப்படும் என நம்புகின்றேன். என் கலைச்சொல்லாக்க முயற்சியின் திறப்பாடுகளையும் நுட்பங்களையும் வரலாற்றினையும் விரிவாக நூலின் முன்னுரையில் நான் விளக்கியுள்ளேன்.
இவ்வகரமுதலி வெளிவர துணைநின்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
இரா. திருமாவளவன்











