• Home
  • தமிழ்நாடு
  • இன்று 11.12.24 மாலை திருச்சி தமிழ்ச் சங்கத்தில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று 11.12.24 மாலை திருச்சி தமிழ்ச் சங்கத்தில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

Email :152

இன்று 11.12.24 மாலை திருச்சி தமிழ்ச் சங்கத்தில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் முனைவர் செயலாபதி வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் நந்தலாலா தொடக்க உரை வழங்கினார். திருமதி ச. கண்ணம்மாள், மகாகவி பாரதியாரின் பெருமைகளையும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் பற்றி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் திரு S. முத்துக்குமார், ஓய்வு இரயில்வே, பாரதியாரின் வேடமடைந்து பாரதியின் பாடல், “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” இன்னும் பாடலுக்கு சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் அமைச்சர் திரு பெ. உதயகுமார் நன்றி உரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts