
திருச்சியில் பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன் எழுதிய நூல்கள் வெளியீடு!
அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் முத்தரையர் இலக்கிய வட்டம் இணைந்து பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது பிறந்தநாள் தொடக்க விழா, திருமங்கையாழ்வார் பிறந்த நாள் விழா, நூல்கள் வெளியீடு, விருது வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா வரகனேரி தனரத்தினம் மஹாலில் 26-1-2025 (ஞாயிற்றுக்கிழமை )மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது. அறக்கட்டளை துணைத் தலைவர் ஜோதி, திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நலச் சங்க மாவட்ட துணைத் தலைவர் பைரவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இன்ஜினியர் கே. வி. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலை விழா நடைபெற்றது.
இதில்அரசியல்,இலக்கியம்,மருத்துவம்,சட்டத்துறை, கல்வித்துறை ,சமூக மற்றும் ஆன்மீக துறையில் சாதனை புரிந்த 55 நபரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதாளர்களுக்கு விருது அளித்து பாராட்டுரையை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞர் அணித்தலைவர் ஆர்.வி.பரதன் , தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன்,முசிறி சட்ட மன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருவரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் வழங்கினார்கள். விழாவில் இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு முத்தரையர்களின் வரலாறு குறித்து பேருரை ஆற்றினார்.


அவர்தம் உரையில் மூவேந்தர்களுக்கு இணையாக தமிழகத்தில் அற வழியில் ஆட்சி செய்த முத்தரையர் வரலாறு பல்கலைக்கழகத்தில் பாட புத்தகமாக இடம் பெற வேண்டும் என்றார்.
இதில் இதில் பேராசிரியர் மீ. சந்திரசேகரன் எழுதிய நிர்வாகவியலில் சோழப்பேரரசு, நிர்வாகவியலில் சேரப் பேரரசு, நிர்வாகவியலில் பாண்டிய பேரரசு
மற்றும் சந்திரசேகரன், மாறன் மணிகண்டன் இணைந்து எழுதிய முத்தரையர் சாம்ராஜ்யம், பேராசிரியர் எஸ்.ஆர். கோமகன், சந்திரசேகரன் இணைந்து எழுதிய தி குளோரி ஆப் முத்தரையர் டைனாஸ்டி இன் இந்தியா ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது.


நூல்களை மாண்புமிகு அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் வெளியிட முதல் நூலினை கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னால் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் கணபதி, மருத்துவர் பன்னீர்செல்வம், மருத்துவர் அரவிந்தகுமார் ,முத்தரையர் அரசியல் களம் ஒருங்கிணைப்பாளர் கே.பி.எம்.ராஜா மற்றும் பலர் பெற்றுக்கொண்டனர்.மேலும் வழக்கறிஞர் அருணகிரி வழங்கிய வேட்டி,சேலைகள் விழாவில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.



















